பீஸ்ட் பாடல் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:09 IST)
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில பாடல்களும் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு படக்குழு வெளியிட உள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஏனென்றால் பீஸ்ட் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாவதால், பீஸ்ட் பட பாடலை வெளியிட்டால் தேவையில்லாத கவனசிதறல் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்