சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது வழக்கமான மருத்துவப் பரிசோதனை என்ற தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் பதறினர்.
இந்நிலையில், நடிகர் ரஜினியின் நண்பரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.