பாகுபலி 2 - இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (09:13 IST)
உலக அளவி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பாகுபலி 2 திரைப்படம் தமிழில் இன்று சட்ட விரோதமாக வெளியானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.


 
 
இயக்குநர் ராஜமௌலியின் பிம்மாண்ட இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் 9 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் இன்று வெளியாகவில்லை.
 
தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களுக்கிடையேயான பிரச்சனையால் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆனால் தெலுங்கு மொழியில் சென்னையில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியானது.
 
தமிழில் திரையரங்குகளில் பாகுபலி 2 திரைப்படம் வெளியாகாத நிலையில் இன்று காலை சட்டவிரோதமாக முழு பாகுபலி இரண்டாம் பாகம் திரைப்படமும் தமிழில் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
தமிழில் 650 திரையரங்குகளில் பாகுபலி 2 திரைப்படம் வெளியாக இருந்தது. ஏற்கனவே இந்த படத்தின் 2 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியானதில் படக்குழு அதிர்ச்சியில் இருந்தது. ஆனால் தற்போது திரையரங்கில் வெளியாகும் முன்னரே முழு திரைப்படமும் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்