என்னதான் பிரமாண்டம் இருந்தாலும் விஜய்-அஜித்தை நெருங்க முடியவில்லையே!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (06:46 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' இன்று வெளியாகிறது. உலகமே இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்பட்டாலும் விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்கள் படங்கள் போல நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் பல திரையரங்குகளில் திரையிடப்படவில்லை



 


சென்னை உள்பட ஒருசில நகரங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணி காட்சியில் 'பாகுபலி 2' படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நள்ளிரவிலும் அதிகாலையிலும் எதிர்பார்த்த கூட்டம் கூடவில்லை. ஒருசில திரையரங்குகளில் 4 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுதாகவும் தகவல்

இதே விஜய் , அஜித் படங்கள் என்றால் நள்ளிரவிலும் திருவிழா போல் இருக்கும். எனவே என்னதான் பிரமாண்டம், டெக்னிக்கல் படம் என்றாலும் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் பரபரப்பு இல்லை என்பதே உண்மை
அடுத்த கட்டுரையில்