இந்த ஹாங் காங்க் படத்தின் காப்பிதானா அயலான்… லேட்டஸ்ட் தகவல்!

vinoth
செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:17 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11 ஆம் தேதி அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் காட்சிகளை வைத்து இப்போது அது எந்த படத்தின் காப்பி என்பது குறித்து ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். 2009 ஆம் ஆண்டு ஹாங் காங்கில் வெளியான CJ 7 என்ற படத்தைக் காப்பியடித்துதான் இந்த படத்தை எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு வெளியான Paul  படத்தின் காப்பி என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்