சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை மற்றும் கிராபிக்ஸ் பணிகளின் தாமதம் காரணமாக இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் படத்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்துள்ள சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்ற ஆலோசனையை இயக்குனர் ரவிகுமாருக்கு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ரவிக்குமார் இப்போது அயலான் 2 படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.