நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார். கனா படத்துக்கு பிறகு வெற்றி இயக்குனராகியுள்ளதாக அவர் இப்போது லேபில் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
இதையடுத்து அருண் ராஜ இயக்கத்தில் கார்த்தி நடிக்க ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இப்போது அந்த படம் தள்ளிவைக்கப்பட்டு, அதற்கு முன்னர் நயன்தாரா நடிப்பில் பிரின்ஸ் பிக்சட்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.