பிரதீப் ரங்கநாதனின் ‘டயூட்’ படத்துக்கு ஓடிடியில் இவ்வளவு பெரிய டிமாண்ட்டா?

vinoth

சனி, 19 ஜூலை 2025 (07:03 IST)
கோமாளி படத்தின் மூலம் தன்னை ஒரு வணிக இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன் பின்னர் அவர் நடித்த ‘டிராகன்’ திரைப்படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK மற்றும் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் சுமார் 25 கோடி ரூபாய்க்கு என்று சொல்லப்படுகிறது. இந்த தொகை கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்