ஸ்லீப்பர் ஹிட் DNA படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

vinoth

வியாழன், 17 ஜூலை 2025 (13:04 IST)
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாலாவின் பரதேசி மற்றும் சற்குணத்தின் சண்டிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அவரால் பெரியளவில் ஹிட் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது டி என் ஏ படத்தின் மூலம் ஒரு வணிக-விமர்சன வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த படத்தில் அவருடன் நிமிஷா சஜயன் நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கினார். ஒலிம்பியா பிக்சர்ஸ் அம்பேத்குமார் தயாரித்திருந்தார். தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் DNA படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் 19 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்