சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

Siva
வியாழன், 20 பிப்ரவரி 2025 (07:33 IST)
சேரன் நடித்த, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதை உறுதிப்படுத்தும் AI வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேரன், கோபிகா, சினேகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்த ‘ஆட்டோகிராப்’ திரைப்படம், பரத்வாஜ் இசையில் உருவாகி, 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வெளியானது. இன்றுடன் இந்த படம் வெளியாகி சரியாக 21 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, இந்த படத்தை மீண்டும் ரீரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, புதிய AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இதில், சேரன் இளமையாகவும், சினேகா உள்ளிட்டோர் இடம் பெறுவதையும் காணலாம்.

இந்த AI வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், "ஆட்டோகிராப்  படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்கிற கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், ஆட்டோகிராப் திரைப்படம் சிறந்த பின்னணி பாடகி விருதை சித்ராவிற்கும், சிறந்த பாடலாசிரியர் விருதை பா. விஜய்க்கும் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்