கோலி சோடா வெப் சீரிஸ் ரிலீஸை அறிவித்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

vinoth

சனி, 7 செப்டம்பர் 2024 (13:25 IST)
இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. இந்நிலையில்  கோலி சோடா –ரைஸிங் என்ற வெப் தொடரை அவர் இயக்கி முடித்துள்ளார்.  இதில் நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்க சேரன் , ரம்யா நம்பீசன் மற்றும் புகழ் ஆகியோர் மற்ற வேடங்களில் நடிக்கின்றனர்.

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் வெப் சீரிஸ் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த சீரிஸுக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்