‘கோலி சோடா- தி ரைசிங்’ வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!

vinoth

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:37 IST)
இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. இந்நிலையில்  கோலி சோடா –ரைஸிங் என்ற வெப் தொடரை அவர் இயக்கி முடித்துள்ளார்.  இதில் நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்க சேரன் , ரம்யா நம்பீசன் மற்றும் புகழ் ஆகியோர் மற்ற வேடங்களில் நடிக்கின்றனர்.

டிஸ்ன் ப்ளஸ் ஹாட்ஸ்டார் தொடரில் வெளியாகும் இந்த தொடரின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது. மேலும் டிரைலர் வெளியீட்டின் போதே சீரிஸ் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்