விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்' திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு இது ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பல திரையரங்குகளில் விஜய் தேவரகொண்டாவுக்கு மட்டுமல்லாமல், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஹீரோக்களுக்கு மட்டுமே கட் அவுட்கள் வைக்கும் ரசிகர்கள், முதல் முறையாக ஒரு இசையமைப்பாளருக்கும் பிரம்மாண்ட கட் அவுட் வைத்திருப்பது, அனிருத்தின் இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
படம் பார்த்த பலரும், 'கிங்டம்' படத்தின் மிகப்பெரிய பலமே அனிருத்தின் பின்னணி இசைதான் என்றும், அதனால்தான் அவருக்குக் கட் அவுட் வைத்திருக்கிறார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
'கிங்டம்' படத்தின் கதைப்படி, கான்ஸ்டபிளாக பணிபுரியும் விஜய் தேவரகொண்டா, தனது அண்ணனை சிறுவயதிலிருந்தே தேடி வருகிறார். இந்நிலையில், ஒரு ட்ரக் மாஃபியா கும்பல் திடீரென அவரது வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குகிறது. அதன் பின் என்ன நடக்கும் என்பதே இந்தப் படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்.