சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் பிரம்மாண்டமான விளம்பர நிகழ்ச்சி ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விழாவில் மிகவும் குறைந்த பிரபலங்களே கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், 'கூலி' படக்குழுவினர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள டி. ராஜேந்தரை அழைத்ததாகவும், அதற்காக அவர் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.