ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்! வைரல் வீடியோ

Webdunia
புதன், 19 மே 2021 (19:04 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டெவிட் வார்னர். இவர்  தனுஷ்- சாய்பல்லவி இணைந்து ஆடிய ரவுடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார் இது வைரலாகி வருகிறது.

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி -2 இப்படம் வெற்றி பெற்றதைவிட இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ரவுடி பேபி பாடல் சூப்பர் ஹிட் அடித்து பல கோடி வியூவர்ஸை பெற்றது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரொனா இரண்டாம் கொரொனா அலை பரவலால் ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து வீரர்கள் ஓய்வெடுத்துவருகின்றனர்.

எனவே, ஆஸ்திரேலியா கிர்க்கெட் வீரரும், முன்னாள் ஹதராபாத் அணி கேப்டனுமாக  டேவி வார்னர் தனது இன்ஸ்டாகிராமில் ரவுடி பேபி பாடலுக்கு சாய் பல்லவியுடன் டான்ஸ் ஆடுவது போல் ஃபேஸ் மேகர் ஆப்பில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் மைதானத்திலேயே புட்டபொம்மா பாடலுக்கு டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்