15 ஆண்டுகால நட்பு...முன்னணி நடிகர்களை ஒன்றாக இணைத்த கொரொனா !

Webdunia
புதன், 19 மே 2021 (17:19 IST)
மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், நரேன் போன்றோர் சமீபத்தில் வீடியோ சாட்டிங்கில் பங்கேற்று தங்கள் 15 ஆண்டுகால நட்பு குறித்து பேசியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறாது.

கடந்த 2006 ஆம் ஆண்டு  மலையாளத்தி வெளியான படம் கிளாஸ்மேட்ஸ். இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான பிரித்விராஜ், காவ்யா மாதவன், நரேன், இந்திரஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அறிமுகம் ஆகினர்.

இப்படம்தான் தமிழில், ஷக்தி, பிரித்விராஜ், நடிப்பில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இப்படத்தை மலையாளத்தி இயக்கிய லால்ஜோஸ் என்பவரே இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. எனவே கொரொனா ஊரடங்கில் கிளாஸ்மேட்ஸ் படத்தில் நடித்த காவ்யா  மாதவன், பிரித்விராஜ், ஜெயசூர்யா, நரேன், இந்திரஜித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வீடியோ சாட்டிங் மூலம் இணைந்து தங்கள் நட்பை பகிர்ந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படத்தை பிரித்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்