நடிகர் தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸுக்காக தொடரி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால், மீண்டும் அந்த நிறுவனத்துக்கு படங்களில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அதையடுத்து 3 படங்கள் அந்த நிறுவனத்துக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அதில் பட்டாஸ் படம் வெளியாகியுள்ளது. இப்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படமும் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படமும் உருவாக்கத்தில் உள்ளது.