2 நாளில் உடல் தேறிவிடும் என்று சொன்னார்களே? வெற்றிமாறன் வருத்தம்!

திங்கள், 17 மே 2021 (19:17 IST)
இரண்டு நாளில் உடல் தேறிவிடும் என்று மருத்துவர்கள் சொன்னார்களே? ஏன் இப்படி ஏமாற்றி விட்டு சென்று விட்டாய் என நடிகர் நிதிஷ் வீரா மறைவு குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
அசுரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அருண்ராஜா காமராஜ் மனைவி இறந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே நிதிஷ் வீரா இறந்ததாக அறிவிக்கப்பட்டது திரை உலகிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது
 
இந்த நிலையில் அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கூறியதாவது: நண்பர் நிதிஷ் வீரா , உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன் . 2 நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள் . ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது .அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும் .அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார் .அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும் ,என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்