அஜித்தை முதன் முதலில் சந்தித்தபோது என்னை கிண்டல் செய்தார்… அட்லி பகிர்ந்த தகவல்!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (14:32 IST)
அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் இப்போது வரை சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஆனாலும் இந்த படத்தில் பல தமிழ்ப் படங்களில் காட்சிகள் உருவப்பட்டு பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு ஜவான் படத்தில் சொருகப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஜவான் படத்தின் இமாலய வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாற்றியுள்ளது.

விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கியுள்ள அட்லி, அஜித்தை வைத்து எப்போது படத்தை இயக்கப் போகிறார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அஜித் ஓகே சொல்லிவிட்டால் உடனே தெறிக்க விட்ருர்லாம் எனக் கூறியுள்ளார் அட்லி. மேலும் முதல் முதலாக அஜித்தை சந்தித்த சம்பவம் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் “நான் ஆரம்பம் ஷூட்டிங்கின் போது நயன்தாரா மூலமாக அஜித் சாரை பார்த்தேன். அப்போது என்னைப் பார்த்து “நீ ஸ்கூல் எல்லாம் படிச்சு முடிச்சிட்டியா என ஜாலியாக கேட்டார்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்