தளபதி 68 இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா?... வில்லனாக விஜய்?

புதன், 15 நவம்பர் 2023 (08:41 IST)
சமீபத்தில் ரிலீஸான விஜய்யின் லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையடுத்து தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது.

அறிவியல் புனைகதை அடிப்படையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரம் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  இது சம்மந்தமான தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்