விஜய்யுடன் இணைந்து நடிப்பது பற்றி ஷாருக் கான் சொன்னது என்ன? அட்லி பகிர்ந்த தகவல்!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:43 IST)
அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படம் இப்போது வரை சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஆனாலும் இந்த படத்தில் பல தமிழ்ப் படங்களில் காட்சிகள் உருவப்பட்டு பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு ஜவான் படத்தில் சொருகப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அட்லி இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் இதுபோன்ற விமர்சனங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள படத்தில்  விஜய் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றி பேசியுள்ள அட்லி “ஷாருக் சார் எப்போதாவது நான் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பற்றி யோசித்தால் அதில் நானும் விஜய்யும் இருக்க விரும்பினால் நான் தயார் எனக் கூறினார். ஆனால் அதற்கான கதை வேண்டும். என்னுடைய அடுத்த படமாகக் கூட அது இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்