அட்லியின் ’அந்தகாரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (11:20 IST)
அட்லி தயாரிப்பில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவான ’அந்தகாரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்திலும், அவர் இயக்கிய அடுத்த படமான தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்திலும் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘அந்தகாரம்’
 
இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. இந்த திரைப்படம் ஓடிடியில் இம்மாதம் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விக்னேஷ் ராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான், பூஜா, குமார் நடராஜன் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் த்ரில் கதையம்சம் கொண்டது
அட்லியின் ’அந்தாகாரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்