அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய விஜய் பட இயக்குநர்!

திங்கள், 21 செப்டம்பர் 2020 (15:35 IST)
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அட்லி. இவர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமனார்.

அதன்பின், தெறி,மெர்சல் , பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் மீது பலர் விமர்சனங்களை முன் வைத்தாலும் தனது வெற்றியின் மூலம் அதைப் பாராட்டுகளாக மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் இன்று தனது 34 அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். எனவே அவரது ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட் பட இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்