அட்லியின் அடுத்த படம் விஜயகாந்த் படத்தின் காப்பியா?

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:07 IST)
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஷாருக்கான் சர்வதேச போலீஸ் மற்றும் கிரிமினல் என இரண்டு வேடங்களில் நடிக்க வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக அட்லி படம் என்றாலே அது எந்தப் படத்தின் காப்பி என்பதை கழுகுக்கண் கொண்டு ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் போலீஸ் மற்றும் கிரிமினல் என்றவுடன் இது எந்த படத்தின் காப்பியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்துவிட்டனர்.
 
ஒருவழியாக அட்லியின் அடுத்த படம் விஜயகாந்த் நடித்த ’பேரரசு’ திரைப்படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் ஒரு வழியாக கண்டுபிடித்துள்ளனர். பேரரசு திரைப்படத்திலும் போலீஸ் மற்றும் கிரிமினல் என இரண்டு வேடத்தில் விஜயகாந்த் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது அட்லி-ஷாருக்கான் படம் வெளியானால்தான் தெரிய வரும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்