கேரளாவில் சசி தரூர் முதல்வராக வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்த நிலையில், கேரள காங்கிரஸ் பிரமுகர் முரளிதரன் என்பவர், "சசி தரூர் முதலில் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பதை முடிவு செய்யட்டும், அதன்பின் முதல்வர் கனவு காணலாம்" என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் முரளிதரன் மேலும் பேசுகையில், "சர்வே என்ன சொன்னாலும், கேரளாவில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முதல்வர் பதவிக்கு யார் தகுதியானவர் என்பதை தேர்வு செய்வார்கள். அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய கட்சியின் விதிமுறைகளின்படி ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீப காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி பேசி வரும் சசி தரூரை, காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக எப்படி நிறுத்துவார்கள் என்ற கேள்வியும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.