பெண்களின் தயக்கமும் பயமும்தான் தவறுகளுக்குக் காரணமாக அமைகிறது… நடிகை பவானி ஸ்ரீ கருத்து!

vinoth

வியாழன், 17 ஜூலை 2025 (13:11 IST)
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய பாவக்கதைகள் ஆந்தாலஜி மூலமாக நடிகையாக அறிமுகமானார் பவானி ஸ்ரீ. இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷின் தங்கையாவார். அடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த இரு படங்களுக்குப் பிறகு அவரின் அடுத்த படம் எதுவும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் “நான் இதுவரை சினிமாவில் அதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்ததில்லை. பெண்களின் பயமும் தயக்கமும்தான் சிலர் தவறிழைக்கக் காரணமாக அமைகின்றன. பெண்கள் தங்களுக்கு இதுப்போல நடக்கும்பொது அதை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது. மற்றவர்களுக்கு அதுபோல நடக்காது” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்