பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்ததை ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர்.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது மற்றும் டிராகன் படத்தில் நடிகராக அறிமுகம் என ரவீந்தர் பயணித்து வருகிறார். இவர் மேல் ஏற்கனவே சில மோசடிப்புகார்கள் இருக்கும் நிலையில் தற்பொது மேலுமொரு மோசடி புகாரில் சிக்கியுள்ளார்.
ஆன்லைன் வியாபாரம் மூலமாக அதிக லாபம் பெற்றுத்தருவதாக பணம் பெற்று சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் அவர் மோசடி செய்துள்ளதாக மும்பை போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட ரோஹன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் ரவீந்தருக்கும் அதில் தொடர்பிருப்பதாக போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.