’சர்தார் 2’ படத்தின் 2வது நாயகி இவர்தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (12:51 IST)
’சர்தார் 2’ படத்தின் நாயகி மாளவிகா மோகனன் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்தி நாயகனாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

அதன்பின் கடந்த நான்கு நாட்களுக்கு முன் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகை ஆஷிகா ரகுநாத் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே தமிழில் ’பட்டத்து அரசன்’ ’மிஸ் யூ’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது கார்த்தியின் ’சர்தார் 2’படத்திலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் இன்னொரு நாயகியும் இணைய இருப்பதாகவும் மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது என்பதும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்