மீண்டும் தொடங்கும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஷூட்டிங்!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (08:22 IST)
அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் சில நாட்கள் நடந்து முடிந்தது.

இதையடுத்து அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்குக்கு சென்றதால் குட் பேட் அக்லி ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதியோடு விடாமுயற்சி ஷூட்டிங் மொத்தமாக முடியவுள்ள நிலையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஐதராபாத்தில் குட் பேட் அக்லி ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்