அரவிந்தசாமியின் ரெண்டகம் ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (13:42 IST)
அரவிந்தசாமியின் ரெண்டகம் ரிலீஸ் தேதி திடீர் ஒத்திவைப்பு!
பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான ரெண்டகம் படம் நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் பணிகள் தாமதமாவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும், இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் கௌதம் சங்கர் ஒளிப்பதிவில், அப்பு என். பட்டதாரி படத்தொகுப்பில் அருள்ராஜ் கென்னடி இசையில் உருவாகியுள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்