அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அஜர்பைஜான் என்ற நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இது தவிர கங்குவா உள்ளிட்ட ஏராளமான பெரிய பட்ஜெட் படங்களில் அவர் பண்யாற்றினார். இந்நிலையில் அஸர்பைஜானில் இருந்து அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது மிலன் பணியாற்றி வந்த கங்குவா படத்தின் மிகப்பெரிய அரங்கு ஒன்றை அமைக்கும் பணியை மிலனின் மனைவியான மரியா ஏற்றுள்ளாராம்.
இவர் ஏற்கனவே மிலன் பணியாற்றிய பல படங்களில் அவரிடம் துணை கலை இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர் என சொல்லப்படுகிறது.