விடாமுயற்சி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள அஜர்பைஜான் பறந்த திரிஷா!

சனி, 4 நவம்பர் 2023 (07:33 IST)
அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா லியோ படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். இப்போது அந்த நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக மீண்டும் அஸர்பைஜான் பறந்துள்ளார்.

இதற்கிடையில் விடாமுயற்சி படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய அஜித், தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு காரணமாக அஜர்பைஜானில் உயிரிழந்தார் என்பதால் இந்த மருத்துவப் பரிசோதனைக்கு அஜித் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்