கமலின் 'தக் லைஃப் ' படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (20:55 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் கமல்234 பட டைட்டில் 'தக் லைஃப்' அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழுக்கு லோகேஷ் வாழ்த்து கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 படத்தில்  துல்கர் சல்மான்,  ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர்  இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கமலின் 234 பட டைட்டில் அறிவிப்பு வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் டைட்டில்  'தக் லைஃப்' என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் இசை ஏ.ஆர்.ரஹ்மமான் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். இப்படத்திற்கு அன்பறிவ் சண்டை காட்சிகள் இயக்கியுள்ளனர். ரவி சே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கமல் – மணிரத்னம் இணையும் கமல் 234 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இன்று வெளியான இன்ற்றோ வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், கமல்ஹாசனின் தீவிர ரசிகரும் விக்ரம் பட இயக்குனருமான  லோகேஷ் கனகராஜ் தன் வலைதள பக்கத்தில் இப்படத்தில் பணியாற்றும் கமல், மணிரத்னம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் கூறி, பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்