அர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் பட நாயகன்! யாருன்னு பாருங்க!

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (11:37 IST)
ஹாலிவுட்டில் பிரபல ஆக்‌ஷன் ஹீரோவாக திகழ்ந்தவர் அர்னால்ட் ஸ்க்வாசர்னெக்கர். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. இந்நிகழ்வை ஹாலிவுட் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ஹாலிவுட்டின் பிரபல ஆக்‌ஷன் ஹீரோவான அர்னால்ட்,”டெர்மினேடர்” “கம்மாண்டோ” “ட்ரூ லைஸ்” போன்ற பல ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்தவர். மேலும் அவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அர்னால்டின் மகள் கேத்ரினுக்கு திருமணம் நடைபெற்றது. கேத்திரினின் கணவர் பிரபல ஹாலிவுட் நடிகரான கிரிஸ் ப்ராட் என்று தெரியவந்துள்ளது.

கேத்ரினின் கணவரான கிரிஸ் ப்ராட் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் “கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி” “அவெஞ்சர்ஸ் எண்டு கேம்” “ஜூராஸிக் வேர்ல்டு” போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர்.
இந்நிலையில் அர்னால்டின் மகள் கேத்ரினுக்கும் நடிகர் கிரிஸ் ப்ராட்டுக்கும் இடையே சமீபத்தில் திருமணம்  நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இத்திருமணத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தியாதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அர்னால்டு மகள் கேத்ரினின் கணவரான  நடிகர் கிரிஸ் ப்ராட்டின் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியொடு தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்