அஜித் சாரை வைத்துப் படம் எடுக்காமல் என் தொழில் வாழ்க்கை முழுமையடையாது- லோகேஷ் கொடுத்த அப்டேட்!

vinoth

திங்கள், 28 ஜூலை 2025 (08:19 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

தனது இயக்குநர் பயணத்தை "மாநகரம்" திரைப்படம் மூலம் தொடங்கினார். அதன் பின்வரும்  "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்", "லியோ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்தடுத்து இந்திய சூப்பர் ஸ்டார்களை வைத்துப் படங்களை இயக்கி வரும் லோகேஷ் அஜித்தை வைத்துப் படம் இயக்குவது குறித்து பேசியுள்ளார். அதில் “அஜித் சாரை வைத்துப் படம் பண்ணாமல் என்னுடைய சினிமா வாழ்க்கை நிறைவுபெறாது. அவரை என்னுடைய திரைக்கதையில் ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்க ஆசையாக உள்ளேன். இது சம்மந்தமாக சுரேஷ் சந்திரா (அஜித்தின் மேலாளர்) மூலமாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  நான் என் கதையை அனுப்பிவிட்டேன். பொருத்திருந்து பார்ப்போம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்