தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதை உறுதி செய்துள்ள லோகேஷ் “அருண் மாதேஸ்வரன் என்னிடம் நடிக்க ஆசை இருக்கா என்று கேட்டார். நான் பார்க்கலாம் என்று சொல்லிவைத்திருந்தேன். அவர் இயக்கவிருந்த இளையராஜா பயோபிக் படம் தாமதம் ஆனதால் இப்போது அவர் இயக்கவுள்ள ஒரு கேங்ஸ்டர் கதையில் நடிக்கவுள்ளேன். கைதி 2 படம் தொடங்க இன்னும் 8 மாதங்கள் உள்ளன. 80 நாட்களில் இந்த படத்தை முடித்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.