8 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படம்!

vinoth

திங்கள், 28 ஜூலை 2025 (09:53 IST)
இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் 8 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்ட திரைப்படம் ‘அடங்காதே’.  ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி, காவல் விசாரணை  அதிகாரியாக மந்த்ரா பேடி, சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி வி பிரகாஷே இசையமைத்திருந்தார்.

இந்த படம் சென்சாருக்கு சென்ற போது படத்துக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என சென்சார் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதையடுத்து ரிவைசிங்குக்கு பெங்களூருக்கு படக்குழுவினர் அனுப்பினர். அங்கே படம் பார்த்த அதிகாரிகள் படத்துக்கு 190 இடங்களில் கட் சொல்லியுள்ளனர். அதற்கு சம்மதிக்கா விட்டால் படத்துக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவித்துள்ளனர். இதற்குப் படக்குழு சம்மதிக்காததால் இந்த படம் 8 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது.

இந்நிலையில் இப்போது பிரச்சனைகள் முடிவுக்கு வந்து படம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி வி பிரகாஷின் ‘ப்ளாக்மெய்ல்’ திரைப்படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்