மீண்டும் ஷங்கருடன் இணைந்த இசையமைப்பாளர்…. ரஹ்மான் ரசிகர்கள் சோகம்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:51 IST)
இயக்குனர் ஷங்கர் ராம்சரண் தேஜாவை வைத்து இயக்கும் திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்த ஷங்கர் இப்போது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பட்ஜெட் ஷங்கரின் கடைசி படங்களை விட மிகவும் கம்மியாம். ரூ 170 கோடி ரூபாய் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 மாதங்களுக்குப் பிறகே தொடங்க உள்ளதாம். இடையில் ராம் சரண் தனது ஆர் ஆர் ஆர் படத்தை முடிக்கவும், ஷங்கர் தனது மகளின் திருமணத்தை முடிக்கவும் முன்னுரிமைக் கொடுக்க உள்ளார்களாம். 

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்தியன் 2 படத்தின் போது அனிருத்தோடு வேலை செய்த ஷங்கர் அவரின் வேலைகள் பிடித்துப் போகவே மீண்டும் ஒரு முறை அவரோடு இணைந்துள்ளாராம். ஷங்கர் ஏ ஆர் ரஹ்மான் காம்பொ மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருந்த நிலையில் இந்த செய்தி ரஹ்மான் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்