ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா; அதிகாரபூர்வ அறிவிப்பு!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (17:29 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தில் ராம் சரண் தேஜா நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தில் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படம் அவரது 15 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை இயக்க பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த அதிகா
ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் தேஜா; அதிகாரபூர்வ அறிவிப்பு!
ரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த ஷங்கர் அந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு புதிய படத்தை தொடங்க உள்ளது திரையுலகினரை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் உருவாகும் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


#SVC50 will unite two big forces as never seen before

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்