உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

vinoth

வியாழன், 26 ஜூன் 2025 (10:37 IST)
தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த 'குபேரா' திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை பேன் இந்தியா படமாக ரிலீஸானது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்க சுனில் நாரங் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இருந்தும் இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்ததால் தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படத்துக்குக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கில் நல்ல வசூலையும், தமிழில் சராசரிக்கும் குறைவான வசூலையும் பெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் இந்த படத்துக்கு வெற்றி விழா நடத்திக் கொண்டாடி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் இந்த படம் 5 நாளில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தனுஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதில் இந்திய அளவிலான வசூல் 70 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்