இசையால் வழிதவறி செல்லும் இளைஞர்கள்.. இசைக்கருவிகளை தீயிட்டு கொளுத்திய தாலிபான்கள்..!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:36 IST)
இசையால் இளைஞர்கள் வழிதவறி செல்வதாக கூறியுள்ள தாலிபான்கள் இசைக்கருவிகளை தீயில் எரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் உயர்கல்வியை பயிலக் கூடாது, பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது, விளையாட்டுத்துறையில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 
 
இந்த நிலையில் இசை கருவிகளை வாசிக்கும் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதாக கூறியுள்ள தாலிபான்கள் இசைக்கருவிகளை பொதுஇடத்தில் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ஆப்கானிஸ்தானில் இசைக்கருவிகளை  இசைக்க கூட இளைஞர்களுக்கு தாலிபான்கள் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்