தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது கூலி,ஜனநாயகன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அதில் “நான் என்னுடைய பாடல்கள் எங்காவது தேங்கிவிட்டால், உடனே chat GPT-ல் (நான் ப்ரீமியம் கணக்கு வைத்திருக்கிறேன்). அந்த பாடலை போட்டு எனக்கு இரண்டு வரிகள் சரியாக பொருந்தவில்லை. அதை சரிப்படுத்தித் தா என்று கேட்பேன். அது எனக்கு 10 வகையான வார்த்தைகளைக் கொடுக்கும். அதில் பொருத்தமானதை எடுத்து நான் பயன்படுத்திக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இப்போது அவர் மேல் மேலும் விமர்சனங்கள் எழ வழிவகுத்துள்ளது.