தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவான கிங்டம் திரைப்படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.
சலார், கே ஹி எஃப் 2 மற்றும் ரெட்ரோ ஆகிய படங்களின் சாயலில் உள்ளதாக எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் இந்த படம் சுமார் 67 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.