மறைந்த ஆனந்த கண்ணனின் கடைசி DP!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (11:18 IST)
சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன். தொகுப்பாளராக இருந்ததை தவிர்த்து சித்துபாத் உள்ளிட்ட சீரீயல் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.
 
ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்த இவரது மறைவிற்கு ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
அதோடு சமூக வலைத்தளங்களில் #RIPanandakannan என்ற ஹேஸ்டேகில் இரங்கல் பதிவுகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்நிலையில் மறைந்த  ஆனந்த கண்ணனின் கடைசி வாட்ஸ் ஆப் DP புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் மனைவியின் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடியுள்ள அந்த புகைப்படம் பலரையும் எமோஷ்னலாகிக்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்