நடிகர் தனுஷ்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:25 IST)
தனுஷ் நடித்த படத்தை பாராட்டி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ’தி க்ரே மேன்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.
 
 இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்து இருப்பது பெருமையாக உள்ளது என்றும் எதிர்காலத்தில் நடிக்க இருக்கும் படங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 மேலும் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மென்மேலும் தனுஷ் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்