மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2 படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (21:23 IST)
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவான திரைப்படம் ‘பிசாசு 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பிசாசு 2படத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாடலான நெஞ்சை கேளு என்ற பாடல் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்