லியோ புதிய போஸ்டர்.. கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி..!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (08:59 IST)
விஜய் நடித்த 'லியோ’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டரில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி சிங்கிள் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
மேலும் இந்த போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியுடன் வாயில் சிகரெட்டுடன் ஸ்டைலாக இருந்ததும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் சிகரெட் புகைப்பதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! 
 
லியோ திரைப்படத்தின்  முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி  இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை  குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. 
 
புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு.  சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
இவ்வாறு டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 
 
Edited by mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்