பணபாக்கி: நள்ளிரவில் லாட்ஜில் கதறிய நடிகை

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (11:15 IST)
நாகர் கோவிலில் லாட்ஜின் வாடகை பாக்கி காரணமாக நடிகை ஒருவருக்கும் லாட்ஜ் நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் கதறி அழுதார்.
பிரபல மலையாள நடிகை மஞ்சு சவேர்கர் படப்பிடிப்பிற்காக நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு ஒரு லட்ஜில் ரூம் எடுத்து அனைவரும் தங்கி படப்பிடிப்பிற்கு வந்து சென்றுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து தனது அறைக்கு திரும்பிய மஞ்சு, அறையில் பெட்ஷிட்கள் மற்றும் தலையணை உறைகள் மாற்றாமல் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார்.
இதையடுத்து அவர் லாட்ஜ் நிர்வாகத்தினரிடம் சண்டையிட்டார். அப்போது அவர்கள் வாடகை பாக்கி 60 ஆயிரம் ரூபாய் தந்துவிட்டு வெளியே செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன நடிகை அதனை பட தயாரிப்பாளரிடம் கேளுங்கள் என கூறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீஸுக்கு போன் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பித்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். நள்ளிரவில் நடிகை செய்த வேலையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்