“நிறுத்துங்கள் கமல்… நீங்கள்..” கமல் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட அமிதாப் பச்சன்!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (09:21 IST)
கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் அறிமுக வீடியோ சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள காமிக் கான் –ல் வெளியிடப்பட்டது. அப்போது கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் பிரபாஸ் ஆகிய மூவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது கமல்ஹாசன் பேசும்போது “நாங்கள் கதைகளை உருவாக்குகிறோம். ரசிகர்கள் நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள். அமிதாப் ஜி நடிப்பையும், பிரபாஸ் நடிப்பையும் பார்க்கும் போது நமக்கு அது புரியும்.” எனப் பேசினார். அப்போது குறிக்கிட்ட அமிதாப் பச்சன் “நிறுத்துங்கள் கமல்.. எளிமையாக இருப்பதை விடுங்கள். நீங்கள் எங்களை விட சிறந்த நடிகர்” எனப் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்