பிரபாஸ்-கமல் இணைந்துள்ள ‘புராஜக்ட் கே’ படத்தின் புதிய அப்டேட்

புதன், 19 ஜூலை 2023 (14:03 IST)
‘புராஜக்ட் கே’ படத்தின் புதிய  அப்டேட் வெளியாகியுள்ளது.
 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பிரபாஸ். பான் இந்திய ஸ்டாராக அறியப்படும் இவரது அடுத்த படம் புராஜக்ட் கே.

மகா நடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கி வரும் ‘புராஜெக்ட் கே ‘ படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும்   நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அமெரிக்காவில் உள்ள காமிக் கான்  மற்றும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில் ஆகிய இடங்களில்  ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகும் என தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், புராஜக்ட் கே படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ள  நிலையில், இந்த வீடியோவை வெளியிடுவதற்காக  நடிகர் பிரபாஸ் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இதேபோல் நடிகர் கமலும் அமெரிக்கா சென்றுள்ளார்.

இன்று இப்படத்தைத் தயாரித்து வரும் வைஜெயந்தி நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’எல்லா நல்லவைகளும் நடக்க  நேரம் எடுத்துக் கொள்ளும்’’ என்று பதிவிட்டுள்ளது.

நேற்று, புராஜக்ட் கே படத்தில், நடிகை தீபிகா படுகோனின் புதிய போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Just hanging out on the hills :) #Prabhas #ProjectK pic.twitter.com/kISJldAbJF

— Rana Daggubati (@RanaDaggubati) July 18, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்